Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரான்சில் பறவைகளிடையே அதிவேகத்தில் பரவக்கூடிய பறவைக் காய்ச்சல்

பிரான்சில் பறவைகளிடையே அதிவேகத்தில் பரவக்கூடிய பறவைக்காய்ச்சல் அடையாளம் காணப்பட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -
பிரான்சில் பறவைகளிடையே அதிவேகத்தில் பரவக்கூடிய பறவைக் காய்ச்சல்

படம்: AFP/Jimin Lai

பிரான்சில் பறவைகளிடையே அதிவேகத்தில் பரவக்கூடிய பறவைக்காய்ச்சல் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அந்நாட்டின் வட பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் உள்ள கோழிகளிடையே பறவைக்காய்ச்சல் பரவியுள்ளதாக பிரான்சின் வேளாண் அமைச்சு தெரிவித்தது.

விலங்குகளுக்கு எவ்வகையான கிருமி அத்தகைய பறவைக்காய்ச்சலை உண்டாக்கியது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. எனினும், பண்ணையில் இருக்கும் கோழிகளைக் கொன்று, நோய் பரவுவதைத் தடுக்கும் திட்டத்தில் உள்ளதாக அமைச்சு குறிப்பிட்டது.

ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் அண்மை வாரங்களில் பல பகுதிகளில் வாத்து, கோழிப் பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் பரவியது.

கடந்த ஒரு மாதத்தில் பிரான்சில் வனப் பறவைகள், பண்ணைப் பறவைகள் என ஏராளமான பறவைகளிடையே கடுமையான பறவைக் காய்ச்சல் அடையாளம் காணப்பட்டது.

அதனால் அரசாங்கம் பறவைகளை உட்புறங்களில் வைத்துக்கொள்ளும் கட்டுப்பாடுகளை நடப்புக்குக் கொண்டுவந்துள்ளது.

- Reuters 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்