Images
  • france
    (படம்: Reuters)

பிரான்ஸில் 2ஆம் கட்டக் கிருமிப்பரவலா? - ஒரே நாளில் 1,392 கிருமித்தொற்றுச் சம்பவங்கள்

பிரான்ஸில் நேற்று (ஜூலை 29) புதிதாக 1,392 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின.

பிரான்ஸில் இந்த மாதம் பதிவாகிய ஆக அதிக தினசரி எண்ணிக்கை அது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தாலும், பொதுவாக நாட்டில் கிருமிப்பரவல் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

அன்றாடம் உறுதியாகும் புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்களின் விகிதம் அண்மையில் வெகுவாக உயர்ந்துவருகிறது.

இருந்தும், பிரான்ஸ் 2ஆம் கட்டக் கிருமிப்பரவலை எதிர்நோக்கவில்லை என்று அந்நாட்டுச் சுகாதார அமைச்சர் உறுதி அளித்தார்.

கிருமித்தொற்றைக் கையாள்வதில் அலட்சியப் போக்குடன் நடந்துகொள்ள வேண்டாம் என்று அவர் நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டார்.

பிரான்ஸில் 185,196 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

30,200க்கும் அதிகமானோர் மாண்டனர்.உலக அளவில் மாண்டோர் எண்ணிக்கையில் அது 7ஆவது இடத்தில் உள்ளது.

Top