Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரான்ஸில் மதுக்கூடங்களும், உணவகங்களும் மீண்டும் செயல்படலாம்

பிரெஞ்சுப் பிரதமர் எடுவார்ட் பிலிப் (Edouard Philippe), கிருமிப் பரவலை முறியடிப்பதன் தொடர்பில் நடைமுறைப்படுத்தப்பட்ட சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -

பிரெஞ்சுப் பிரதமர் எடுவார்ட் பிலிப் (Edouard Philippe), கிருமிப் பரவலை முறியடிப்பதன் தொடர்பில் நடைமுறைப்படுத்தப்பட்ட சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தியிருக்கிறார்.

அதன்படி, மதுக்கூடங்களும், உணவகங்களும் செயல்பட அனுமதிக்கப்படும்.

அவை, பிரெஞ்சு வாழ்க்கை முறையின் முக்கிய அம்சங்கள் என்று திரு. பிலிப் கூறினார்.

பாரிஸில் கிருமிப் பரவல் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை என்பதால், மொட்டை மாடிகளில் மட்டும் உணவகங்கள், மதுக்கூடங்கள் செயல்பட அனுமதிக்கப்படும் என்றார் அவர்.

என்றாலும் பாதுகாப்பான இடைவெளி பின்பற்றப்பட வேண்டும்.

ஒரு மேசையில் பத்துப் பேருக்கு அதிகமாக அமரக்கூடாது.

பரிமாறுவோர் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்