Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

Omicron வகைக் கொரோனா கிருமி பிரான்ஸில் ஏற்கனவே பரவிக் கொண்டிருக்கக்கூடும்

பிரான்ஸில் ஒமக்ரான் வகைக் கொரோனா கிருமி ஏற்கனவே பரவிக்கொண்டிருக்கலாம் என அந்நாட்டுச் சுகாதார அமைச்சர் கூறியுள்ளார். 

வாசிப்புநேரம் -

பிரான்ஸில் ஒமக்ரான் வகைக் கொரோனா கிருமி ஏற்கனவே பரவிக்கொண்டிருக்கலாம் என அந்நாட்டுச் சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.

இங்கிலாந்து, இத்தாலி, பெல்ஜியம் போன்ற இடங்களில் பரவிக்கொண்டிருக்கும் அவ்வகைக் கிருமி, பிரான்ஸிலும் பரவிக்கொண்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

ஒமக்ரான் கிருமித்தொற்றுச் சம்பவங்களை அடையாளம் கண்டு, பரவலை மெதுவடையச் சுகாதார அமைச்சு முனைவதாகக் கூறப்பட்டது.

பிரான்ஸில் தற்போது ஐந்தாம் முறையாகக் கிருமிப்பரவல் நிலவுகிறது. அங்கு நேற்று 24 மணிநேர இடைவெளியில் 37,000க்கும் மேற்பட்ட தொற்றுச் சம்பவங்கள் பதிவாயின.

பிரஞ்சு மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவில் கிருமித்தொற்றுக்குச் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

- Reuters 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்