Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரான்ஸில் இரண்டாவது முறையாக நாடளாவிய முடக்கநிலை அறிவிப்பு

பிரான்ஸில் இரண்டாவது முறையாக நாடளாவிய முடக்கநிலை அறிவிப்பு 

வாசிப்புநேரம் -

பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron), நாடளாவிய இரண்டாவது முடக்கத்தை அறிவித்துள்ளார்.

அது, குறைந்தது அடுத்தமாத இறுதிவரை நடப்பிலிருக்கும்.

நாளை தொடங்கும் முடக்கத்தின்கீழ் பொதுமக்கள், மருத்துவச் சிகிச்சை பெறவும், அத்தியாவசியப் பணிகளுக்காகவும் மட்டுமே வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவர்.

மதுக்கூடங்கள், உணவகங்கள் போன்றவை மூடப்பட்டிருக்கும். ஆனால், பள்ளிகளும் தொழிற்சாலைகளும் திறந்திருக்கும்.
கடந்த ஏப்ரலுக்குப் பிறகு, கொரோனா கிருமித்தொற்றால் மாண்டோர் எண்ணிக்கை, பிரான்ஸில் கடுமையாக உயர்ந்துள்ளது.

இரண்டாம் கட்டக் கிருமிப்பரவலால் பாதிக்கப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள பிரான்ஸ், முதல்கட்டப் பரவலைக் காட்டிலும் கடுமையாக பாதிக்கப்படலாம் எனத் திரு. மக்ரோன் குறிப்பிட்டார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்