Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரான்ஸில் ஊரடங்கு நேரம் நீட்டிப்பு

பிரான்ஸில் (France) நடப்பில் உள்ள நாடளாவிய ஊரடங்கு, நாளை முதல் நீட்டிக்கப்படவுள்ளது.

வாசிப்புநேரம் -

பிரான்ஸில் (France) நடப்பில் உள்ள நாடளாவிய ஊரடங்கு, நாளை முதல் நீட்டிக்கப்படவுள்ளது.

அங்கு நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த, ஊரடங்கு நேரம் நீட்டிக்கப்படவுள்ளது.

புதிய நடவடிக்கை, குறைந்தது 15 நாள்கள் நடப்பில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

பிரான்ஸின் எல்லாப் பகுதிகளிலும் மாலை 6 மணிக்கே ஊரடங்கு தொடங்கும்.

கடும் பாதிப்புக்கு உள்ளாகிய சில பகுதிகளில் கூடுதல் ஊரடங்கு நேரம் ஏற்கனவே நடப்பில் உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தைத் தவிர, பிற நாடுகளிலிருந்து வருவோர், கிருமித்தொற்று இல்லை என உறுதிப்படுத்தும் PCR பரிசோதனைச் சான்றிதழைக் கொண்டிருக்க வேண்டும்.

அத்தகைய நடவடிக்கைகளைக் கொண்டு, மூன்றாவது முடக்கநிலையைத் தவிர்க்க பிரான்ஸ் முயன்று வருகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்