Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரான்ஸில் 3வது முறையாகத் தேசிய அளவில் முடக்கநிலை; பள்ளிகள் மூடல்

பிரான்ஸில் 3வது முறையாகத் தேசிய அளவில் முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
பிரான்ஸில் 3வது முறையாகத் தேசிய அளவில் முடக்கநிலை; பள்ளிகள் மூடல்

(படம்: REUTERS/Stephane Mahe)

பிரான்ஸில் 3வது முறையாகத் தேசிய அளவில் முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் 3 வாரங்களுக்கு மூடப்படும் என்று பிரெஞ்சு அதிபர் இமானுவல் மக்ரோன் (Emmanuel Macron) தெரிவித்துள்ளார்.

பிரான்ஸில் தலைதூக்கியுள்ள 3ஆம் கட்டக் கிருமிப்பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர, நாடு முழுவதும் முடக்கநிலையை அதிபர் மக்ரோன் அறிவித்துள்ளார்.

அங்கு நோய்த்தொற்றால் மாண்டோரின் எண்ணிக்கை
100,000ஐ நெருங்கும் வேளையில், கிருமித்தொற்றால் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவுகள் நெருக்கடி நிலையை எதிர்நோக்குகின்றன.

தடுப்பூசி போடும் பணியும் திட்டமிடப்பட்டதைவிட மெதுவாக நடைபெறுகின்றது.

அதனால், பொருளியலைப் பாதுகாப்பதற்காக நாட்டைத் திறந்து வைத்திருக்கவேண்டும் என்ற தமது இலக்கைக் கைவிடும் கட்டாயத்திற்குத் திரு. மக்ரோன் தள்ளப்பட்டுள்ளார்.

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள நடமாட்டக் கட்டுப்பாடுகள் குறைந்தது ஒரு மாதத்திற்காவது நீடிக்கும் என்று கூறப்படுகிறது.

- Reuters/ec 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்