Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரான்ஸ், உலக நாடுகளில் இருக்கும் தனது ஆயுதப் படையினருக்கு இடையே தொடர்பை வலுப்படுத்தப் புது முயற்சி

பிரான்ஸ், அதன் அதிநவீனச் செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது.

வாசிப்புநேரம் -
பிரான்ஸ், உலக நாடுகளில் இருக்கும் தனது ஆயுதப் படையினருக்கு இடையே தொடர்பை வலுப்படுத்தப் புது முயற்சி

கோப்புப் படம்: AFP / GUILLAUME SOUVANT

பிரான்ஸ், அதன் அதிநவீனச் செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது.

உலகெங்கிலும் உள்ள பிரெஞ்சு ராணுவப் படையினருக்கு இடையே தொடர்பை வலுப்படுத்துவது அதன் நோக்கம்.

அந்தச் செயற்கைக்கோள், விண்ணிலும் மண்ணிலும் ராணுவத் தாக்குதலை எதிர்க்க உதவும் என்று பிரெஞ்சு ஆகாய, விண்வெளிப்படைப் பேச்சாளர் சொன்னார்.

Syracuse 4A எனும் அந்தச் செயற்கைக்கோள், சுற்றி நடப்பவற்றைக் கூர்ந்து கவனிக்கும் ஆற்றல் பெற்றது. மேலும், எந்தவொரு தாக்குதலிலிருந்தும் தப்பித்துக்கொள்கின்ற திறனும் அதற்கு உண்டு.

அணுவாயுதத் தாக்குதலின்போது ஏற்படக்கூடிய மின்காந்த அதிர்வுகளிருந்து பாதுகாத்துக்கொள்ளும் வகையிலும் Syracuse 4A செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

-AFP 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்