Images
  • france covid
    GEORGES GOBET/AFP

அன்றாடம் பதிவாகும் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் கணிசமாகக் குறைந்துள்ளன: பிரெஞ்சு சுகாதார அமைச்சு

பிரான்ஸில் நிலவிய முடக்கநிலை காரணமாக COVID-19 நோய்ப் பரவல் சூழல் மேம்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இம்மாதம் 11ஆம் தேதியுடன் பிரான்ஸ் அதன் முடக்கநிலையைத் தளர்த்தியது.

அதிலிருந்து அன்றாடம் பதிவாகும் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் கணிசமாகக் குறைந்திருப்பதாக பிரெஞ்சு சுகாதார அமைச்சர் ஒலிவர் வேரான் (Oliver Veran) தெரிவித்தார்.

இருப்பினும், நிலைமைப் பூரணமாக மேம்பட்டுள்ளதாக கூறிவிட முடியாது என்று அவர் எச்சரித்தார்.

கொள்ளை நோய் ஓய்ந்துள்ளதாக என்பதை அறிந்துகொள்ள எப்படியும் பத்து பதினைந்து நாள்கள் தேவைப்படும் என்று அவர் கூறினார்.

கிருமித்தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று பிரெஞ்சுஅதிபர் இம்மானுவேல் மக்ரொன் (Emmanuel Macron) தெரிவித்தார்.

பிரான்ஸில் இதுவரை 28,132 பேர் கிருமித்தொற்றால் மாண்டனர்.

Top