Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஃப்ரான்ஸில் மறுபயனீடு செய்யப்படாத பிளாஸ்டிக்கைக் கொண்டு பொட்டலமிடப்பட்ட பொருட்களுக்கு அபராதம்

ஃப்ரான்ஸ், மறுபயனீடு செய்யப்படாத பிளாஸ்டிக்கைக் கொண்டு பொட்டலமிடப்பட்ட பொருட்களுக்கு அபராதம் விதிக்கும் முறையை நடப்புக்குக் கொண்டுவரத் திட்டமிடுகிறது.

வாசிப்புநேரம் -
ஃப்ரான்ஸில் மறுபயனீடு செய்யப்படாத பிளாஸ்டிக்கைக் கொண்டு பொட்டலமிடப்பட்ட பொருட்களுக்கு அபராதம்

(படம்: AFP PHOTO/FRED TANNEAU)

ஃப்ரான்ஸ், மறுபயனீடு செய்யப்படாத பிளாஸ்டிக்கைக் கொண்டு பொட்டலமிடப்பட்ட பொருட்களுக்கு அபராதம் விதிக்கும் முறையை நடப்புக்குக் கொண்டுவரத் திட்டமிடுகிறது.

2025ஆம் ஆண்டுக்குள், நாடு முழுவதும் மறுபயனீடு செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை மட்டுமே பயன்படுத்துவதை உறுதிப்படுத்தும் முயற்சியின் ஓர் அங்கம் அது.

அத்தகைய பல நடவடிக்கைகள் அடுத்த சில ஆண்டுகளில் அறிமுகம் காணும் என்று அந்நாட்டு சுற்றுப்புற அமைச்சின் அதிகாரி கூரினார்.

பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் போத்தல்களைத் திருப்பிக் கொடுக்கும்போது, ஏற்கனவே வசூலிக்கப்பட்ட வைப்புக் கட்டணத்தைத் திரும்பப் பெறும் முறையும் அவற்றில் அடங்கும்.

புதிய திட்டத்தின் கீழ், மறுபயனீடு செய்யப்பட்ட பிளாஸ்டிக்கினால் பொட்டலமிடப்பட்ட பொருட்களின் விலை 10 விழுக்காடு குறைவாக இருக்குமென்று கூறப்பட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்