Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரான்ஸ் : வன்முறைக் கலவரங்களாக உருவெடுத்துள்ள பேரணிகள்

பிரான்ஸில் ஓய்வூதியம் தொடர்பாக நடத்தப்பட்ட பேரணிகள் வன்முறைக் கலவரங்களாக உருவெடுத்துள்ளன.

வாசிப்புநேரம் -
பிரான்ஸ் : வன்முறைக் கலவரங்களாக உருவெடுத்துள்ள பேரணிகள்

படம்: AFP

பிரான்ஸில் ஓய்வூதியம் தொடர்பாக நடத்தப்பட்ட பேரணிகள் வன்முறைக் கலவரங்களாக உருவெடுத்துள்ளன.

ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க காவல்துறை கண்ணீர் புகையையும், மெழுகுப் புகையையும் பயன்படுத்தியது.

தற்போது நடப்பில் இருக்கும் 40-க்கும் அதிகமான ஓய்வூதியத் திட்டங்களை ஒருங்கிணைக்க, அதிபர் இம்மானுவேல் மக்ரொன் திட்டம் கொண்டுள்ளார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன.

பிரானஸ் முழுவதும் 30க்கும் மேற்பட்ட நகரங்களில், 180,000 அதிகமான தொழிற்சங்க உறுப்பினர்கள் பேரணிகளில் இறங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதன் காரணமாக முக்கியப் போக்குவரத்துச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

தலைநகர் பாரிஸில் ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

ஆகாயக் போக்குரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்ததால், விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்