Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரான்ஸ்: புதிய விண்வெளி ராணுவப் பிரிவு

பிரான்ஸ் அதிபர் இமெனுயவல் மெக்ரோன் தேசிய அளவில் புதிய விண்வெளி ராணுவப் பிரிவை அமைக்கப்போவதாக அறிவித்துள்ளார். பிரெஞ்சு ஆகாயப் படையின் ஓர் அங்கமாக அது செயல்படும்.

வாசிப்புநேரம் -
பிரான்ஸ்: புதிய விண்வெளி ராணுவப் பிரிவு

(படம்: Reuters)

பிரான்ஸ் அதிபர் இமெனுயவல் மெக்ரோன் தேசிய அளவில் புதிய விண்வெளி ராணுவப் பிரிவை அமைக்கப்போவதாக அறிவித்துள்ளார். பிரெஞ்சு ஆகாயப் படையின் ஓர் அங்கமாக அது செயல்படும்.

பிரெஞ்சு தேசிய தினக் கொண்டாட்டம் இன்று(ஜூலை 14) இடம்பெறும் நிலையில், அதிபர் மெக்ரோன் அந்தத் தகவல்களை நேற்று வெளியிட்டார்.

தேசியப் பாதுகாப்பு நலனில் அக்கறை செலுத்தும் விதமாக விண்வெளி ராணுவப் பிரிவு அடுத்த ஆண்டு செப்டம்பரில் அமைக்கப்படும் என்றார் அவர்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஏற்கனவே அத்தகைய திட்டத்தைத் தொடங்கியுள்ளார்.

அண்மையில், சீனாவும்
ரஷ்யாவும் விண்வெளி தொடர்பான கவனத்தையும், செலவையும் அதிகரித்துள்ளன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்