Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட ஆசிரியர்; 18 வயது ஆடவர் சந்தேக நபர் - AFP

பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் புறநகர்ப் பகுதியில் ஆசிரியர் ஒருவரின் தலையைத் துண்டித்துக் கொன்ற சந்தேக நபர் 18 வயது ஆடவர் என AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட ஆசிரியர்; 18 வயது ஆடவர் சந்தேக நபர் - AFP

(கோப்புப் படம்: AFP / Bertrand GUAY)

பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் புறநகர்ப் பகுதியில் ஆசிரியர் ஒருவரின் தலையைத் துண்டித்துக் கொன்ற சந்தேக நபர் 18 வயது ஆடவர் என AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவரிடம் இருந்த அடையாள ஆவணங்கள், அவர் ரஷ்யாவின் செச்சென்யா (Chechnya) பகுதியைச் சேர்ந்தவர் எனக் குறிப்பிட்டன.

திரு. சாமுவெல் பட்டி (Samuel Paty) என்ற அந்த ஆசிரியர் நேற்றுத் தலை துண்டிக்கப்பட்டுக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.

அவர் வேலைசெய்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் உட்பட மேலும் 5 பேர், அந்தச் சம்பவம் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக AFP கூறியது.

இதுவரை, மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நடுநிலைப் பள்ளி ஆசிரியரான திரு. பட்டி, இந்த மாதத் தொடக்கத்தில் குடிமையியல் பாடம் நடத்தியபோது, நபிகள் நாயகத்தைப் பற்றிய கேலிச் சித்திரத்தை வகுப்பில் காட்டினார்.

தடுத்து வைக்கப்பட்ட பெற்றோர், கேலிச் சித்திரங்கள் குறித்து திரு. பட்டியிடம் எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

ஆசிரியரைத் தாக்கிக் கொன்ற சந்தேக நபரைக் காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்