Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஜெர்மனியில் நோயாளிகளை உற்சாகப்படுத்தும் மனித இயந்திரக் கருவி Franzi

ஜெர்மனியில் Franzi எனும் மனித இயந்திரக் கருவி Neuperlach மருத்துவமனையைச் சுத்தம் செய்தவாறு நோயாளிகளுக்கு உற்சாகமும் அளிக்கிறது.

வாசிப்புநேரம் -
ஜெர்மனியில் நோயாளிகளை உற்சாகப்படுத்தும் மனித இயந்திரக் கருவி Franzi

(படம்: AFP/Christof Stache)

ஜெர்மனியில் Franzi எனும் மனித இயந்திரக் கருவி Neuperlach மருத்துவமனையைச் சுத்தம் செய்தவாறு நோயாளிகளுக்கு உற்சாகமும் அளிக்கிறது.

"தயவுசெய்து நீங்கள் நகர முடியுமா? நான் சுத்தம் செய்ய வேண்டும்" என்று பேசுகிறது அந்த இயந்திரம்.

நகராவிட்டால் அதன் LED கண்களிலிருந்து மின்னிலக்கக் கண்ணீர் சிந்துகிறது.

நோய்த்தொற்றுக் காலத்தில் மருத்துவமனைகளில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதால், Franzi நோயாளிகளுக்கு மகிழ்ச்சியளிப்பதாகக் கூறப்பட்டது.

நோயாளிகள் அதனுடன் புகைப்படங்களை எடுத்துக்கொள்கின்றனர்.

சிலர் அதனுடன் பேச ஆர்வம் காட்டுகின்றனர்.

சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றால் உருவாக்கப்பட்ட அந்த இயந்திரத்திற்கு முதலில் Ella என்று பெயரிடப்பட்டது.

தொடக்கத்தில் ஆங்கிலத்தில் பேசிய இயந்திரம், தற்போது சரளமாக ஜெர்மன் மொழியும் பேசுகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்