Images
  • luxembourg
    (படம்: Eric Vidal/Reuters)

பொதுப் போக்குவரத்தை இலவசமாக வழங்கத் தயாராகும் லக்சம்பர்க்

ஐரோப்பிய நாடான லக்சம்பர்க், மக்களுக்குப் பொதுப் போக்குவரத்தை இலவசமாக வழங்கத் தயாராகி வருகிறது.

அடுத்த கோடைக் காலத்திலிருந்து, ரயில், டிராம், பேருந்து என அனைத்திலும் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளலக்சம்பர்கின்இன் கூட்டணி அரசாங்கம் அவ்வாறு அறிவித்துள்ளது.

அதனையடுத்து, உலகில் அத்தகைய நடைமுறையைக் கொண்டிருக்கும் முதல் நாடு என்ற பெருமை லக்சம்பர்கைச் சாரும்.

உலக அளவில் ஆக மோசமான போக்குவரத்து நெரிசல் நிலவும் நகரங்களில் லக்சம்பர்க் நகரும் ஒன்று. 

Top