Images
  • Xavier Dupont de Ligonnes
    (படம்: AFP)

பிரான்ஸ் கொலைச் சம்பவம் - கைதுசெய்யப்பட்ட ஆடவர் நிரபராதியா?

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

பிரான்ஸில் ஸேவியர் டுபோண்ட் டெ லிகோனெஸ் என்ற ஆடவர் தனது மனைவியையும் 4 பிள்ளைகளையும் கொலை செய்யவில்லை என்று விசாரணைக்கு நெருக்கமான தரப்புகள் கூறியுள்ளன.

அவர் தனது குடும்பத்தைக் கொலை செய்த சந்தேகத்தின்பேரில் இதற்கு முன் கைது செய்யப்பட்டார்.

ஸேவியரிடம் மேற்கொள்ளப்பட்ட மரபணுச் சோதனையில் அவர் கொலை செய்ததற்கான எந்தத் தடயமும் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

8 ஆண்டுகளுக்கு முன்னர் ஸேவியரின் குடும்பத்தினர் கொல்லப்பட்டனர்.

அந்தக் கொலைச் சம்பவத்தில் அவருக்குத் தொடர்பு இருக்கக்கூடும் என்று நம்பப்பட்டது.

அதன் பின்னர், தலைமறைவான ஸேவியரைக் காவல்துறையினர் தேடி வந்தனர்.

ஸ்காட்லந்தின் (Scotland) கிளாஸ்கோ (Glasgow) விமான நிலையத்தில் 58 வயது சேவியர் கைது செய்யப்பட்டார்.



Top