Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரான்ஸ்: தேசிய சேவை முன்னோட்டத் திட்டம் அறிமுகம்

பிரெஞ்சு அதிபர் இமெனுவல் மெக்ரோன் தேசிய சேவை முன்னோட்டத் திட்டத்தை பிரான்சில் அறிமுகம் செய்துள்ளார். 

வாசிப்புநேரம் -
பிரான்ஸ்: தேசிய சேவை முன்னோட்டத் திட்டம் அறிமுகம்

(படம்: AFP/Dimitar Dilkoff)

பிரெஞ்சு அதிபர் இமெனுவல் மெக்ரோன் தேசிய சேவை முன்னோட்டத் திட்டத்தை பிரான்சில் அறிமுகம் செய்துள்ளார். இளையர்களிடையே குடிமை உணர்வை ஊக்குவிக்கும் முயற்சிகளில் ஒன்றாக அது கருதப்படுகிறது.

2,000 தொண்டூழியர்கள் இத்திட்டத்தில் பங்கேற்கின்றனர்.  அனைவருக்கும் சொந்தச் சீருடை வழங்கப்படும். தேசிய கீதத்துடன் அவர்களது நாள் தொடங்கும்.

15, 16 வயது இளையர்களிடையே தேசிய ஒற்றுமையை வலுப்படுத்த புதிய திட்டம் உதவும் என்று திரு. மெக்ரோன் நம்பிக்கை கொண்டுள்ளார்.

தேசிய சேவை செய்யாத முதல் பிரெஞ்சு அதிபரும் அவரே. பிரான்சில் கட்டாயமாக இருந்த இராணுவ சேவை 1990களின் பிற்பகுதியில் நீக்கப்பட்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்