Images
  • tear gas 1
    (படம்: AP/ Fransisco Seco)

கண்ணீர் புகையைப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைத்த பிரெஞ்சு காவல் அதிகாரிகள்

பிரெஞ்சு காவல் துறை அதிகாரிகள் இன்று (டிசம்பர் 8) கண்ணீர்ப் புகையைப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டக்காரர்களைக் கட்டுப்படுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.


Champs-Elysees பகுதியில் இன்று காலை சுமார் 1,500 ஆர்ப்பாட்டக்காரர்கள் இருந்ததாகவும் அவர்களில் 127 பேர் கைது செய்யப்பட்டதாகவும் காவல் துறைப் பேச்சாளர் கூறினார்.


சுத்தியல், baseball மட்டை, உலோக petanque பந்துகள் ஆகிய ஆயுதங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் வைத்திருந்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் விளக்கினார்.


சென்ற சனிக்கிழமையைப்போல் மீண்டும் மோசமான கலவரம் நிகழாமல் தடுக்கும் நோக்கில் சுமார் 8,000 காவல் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.  

Top