Images
  • french pm
    (படம்: FRANCOIS GUILLOT/AFP)

பிரான்ஸில் அடுத்த ஆண்டின் வரவு செலவு திட்டத்திலிருந்து எரிபொருள் வரி உயர்வு நீக்கம்

பிரான்ஸ் அரசாங்கம், அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்திலிருந்து எரிபொருள் வரி உயர்வு நீக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் வரி உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. அதில் நால்வர் மாண்டனர். அதைத் தொடர்ந்து அந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்னர் எரிபொருள் வரி உயர்வை 6 மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்போவதாக பிரெஞ்சுப் பிரதமர் எடுவார்ட் பிலிப் (Edouard Philippe) கூறியிருந்தார்.

மஞ்சள் சட்டைப் போராட்டக்காரர்கள் தலைநகர் பாரிஸை உட்பட பிரான்ஸின் முக்கிய நகரங்களை ஆக்கிரமித்துள்ளனர். அவர்கள் கடந்த மூன்று வார இறுதிகளில் அங்கு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

வரும் வார இறுதியிலும் போராட்டங்களை நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.  

Top