Images
  • friend
    (படம்: Facebook/Cynthia Hoffman)

உற்ற தோழியை 9 மில்லியன் டாலருக்காகக் கொன்ற பெண்

லாஸ் ஏஞ்சலிஸ்: உற்ற தோழியை 9 மில்லியன் டாலர் பணத்துக்காகக் கொன்றதாய் நம்பப்படும் பெண்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அலாஸ்காவைச் சேர்ந்த 18 வயது டெனலி பிரெமர் (Denali Brehmer), இணையத்தில் சந்தித்த 21 வயது டரின் ஷமில்லரின் (Darin Schilmiller) கோரிக்கைக்கு இணங்க தம் தோழியைக் கொல்ல ஒப்புக்கொண்டதாகக் காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆடவர் செல்வந்தர் போல வேடமிட்டு பிரெமரை நம்பவைத்தார்.

யாராவது ஒருவரைப் பலாத்காரம் செய்து கொலை செய்தால் 9 மில்லியன் டாலர் கொடுப்பதாக ஆடவர் பிரெமரிடம் கூறினார்.

மேலும் நான்கு நண்பர்களைத் திட்டத்தில் சேர்த்துக்கொண்டு உற்ற தோழி சிந்தியா ஹூஃப்மனைக் (Cynthia Hoffman) கொலைசெய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.

காட்டுப் பகுதிக்குள் 19 வயது ஹூஃப்மனை வரவழைத்து அவரைக் கட்டிப்போட்டுத் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் உடலை ஆற்றுக்குள் தள்ளியிருக்கின்றனர்.

ஜூன் 4ஆம் தேதி பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

மாண்ட ஹூஃப்மன் மனவளர்ச்சி குன்றியவர் என்று அவரின் தந்தை கூறியுள்ளார்.

பிரெமர், ஷமில்லர் மற்றும் சம்பவத்தில் தொடர்புடைய மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

Top