Images
  • further rampage intended (1)
    (படம்: MARTY MELVILLE / OFFICE OF PRIME MINITER NEW ZEALAND / AFP)

காவல்துறை அதிகாரிகள் தடுக்கவில்லையென்றால் தாக்குதல் தொடர்ந்திருக்கும்: நியூசிலந்து பிரதமர்

காவல்துறை அதிகாரிகள் கைதுசெய்யவில்லையென்றால் துப்பாக்குச் சூட்டை நடத்திய முக்கியச் சந்தேக நபர் தாக்குதலைத் தொடந்திருக்கலாம் என நியூசிலந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டன் கூறியுள்ளார்.

தாக்குதலை நடத்திய 28 வயது பிரெண்டன் ஹெரிசன் டெரண்ட்டின் (Brenton Harrison Tarrant) காரில் மேலும் இரண்டு துப்பாக்கிகள் இருந்ததைத் திருவாட்டி ஆர்டன் சுட்டினார்.

கைதுசெய்யப்படவில்லையென்றால், தாக்குதலைத் தொடர்வதே அவரின் எண்ணமாக இருந்ததாய் திருவாட்டி ஆர்டன் கூறினார்.

தற்போது அந்தச் சந்தேக நபர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

அவர் மீது மேலும் சில குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது. 

Top