Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

'கிருமித்தொற்றால் சரிந்த பொருளியலை மீட்டெடுக்கப் பணபலம் கொண்ட நாடுகள் உதவ வேண்டும்'

COVID-19-ஐக் கையாளும் முயற்சிகளை ஒருங்கிணைக்க G20-நாடுகளின் நிதித் தலைவர்கள் உடன்பாடு கண்டிருப்பதாக ஜப்பானிய நிதியமைச்சர் டாரோ ஆசோ (Taro Aso) கூறியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
'கிருமித்தொற்றால் சரிந்த பொருளியலை மீட்டெடுக்கப் பணபலம் கொண்ட நாடுகள் உதவ வேண்டும்'

(படம்: China Daily via REUTERS/File Photo)

COVID-19-ஐக் கையாளும் முயற்சிகளை ஒருங்கிணைக்க G20-நாடுகளின் நிதித் தலைவர்கள் உடன்பாடு கண்டிருப்பதாக ஜப்பானிய நிதியமைச்சர் டாரோ ஆசோ (Taro Aso) கூறியிருக்கிறார்.

கிருமித்தொற்றால் சரிந்துள்ள உலகப் பொருளியலை மீட்டெடுக்கப் பணபலம் கொண்ட உறுப்பு நாடுகள் உதவவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் G20-நாடுகளின் நிதி அமைச்சர்களுக்கும் மத்திய வங்கி ஆளுநர்களுக்கும் இடையிலான இரண்டு நாள் சந்திப்பு நேற்றுத் தொடங்கியது.

Apple, Google ஆகிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான அனைத்துலக வரி விதிமுறைகள், மின்னிலக்க நாணயங்கள் ஆகியவற்றைப் பற்றி கலந்துரையாடப்படுகிறது.

சந்திப்பு முடிவடைந்ததும் ஒரு கூட்டறிக்கையை இன்று வெளியிட அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்