Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பெரிய அளவில் தடுப்புமருந்துகளைத் தயாரிக்க மேலும் 4.5 பில்லியன் டாலர் தேவை

G20 நாடுகள், COVID-19 தடுப்புமருந்துகள் எல்லா நாடுகளுக்கும் சிரமமின்றிக் கிடைப்பதை உறுதிசெய்வதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளன.

வாசிப்புநேரம் -
பெரிய அளவில் தடுப்புமருந்துகளைத் தயாரிக்க மேலும் 4.5 பில்லியன் டாலர் தேவை

(படம்: AP/G20 Riyadh Summit)

G20 நாடுகள், COVID-19 தடுப்புமருந்துகள் எல்லா நாடுகளுக்கும் சிரமமின்றிக் கிடைப்பதை உறுதிசெய்வதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளன.

பெரிய அளவில் தடுப்புமருந்துகளைத் தயாரிப்பதற்குக் கூடுதலாக 4.5 பில்லியன் டாலர் நிதி தேவைப்படுகிறது.

அந்த நிதித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும்படி G20 நாடுகளுக்கு நெருக்குதல் அளிக்கப்படும் நிலையில், அவற்றின் தலைவர்கள் 2 நாள் மாநாட்டை நடத்துகின்றனர்.

உலக மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்தால் மட்டுமே, அனைத்து நாடுகளும் பாதுகாப்பாக இருக்க முடியும் என்றார் சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் (Salman bin Abdul-aziz).

ஆண்டு இறுதிக்குள் தடுப்புமருந்து தயாராகிவிடும் எனும் நம்பிக்கை தற்போது உருவாகியுள்ளதாக பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) கூறினார்.

ஏழை, பணக்கார நாடுகள் எனும் பாகுபாடு இல்லாமல், தடுப்புமருந்து அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்றார் அவர்.

தடுப்புமருந்தைத் தயாரித்து, விநியோகிப்பதில், அனைத்துத் தரப்புடனும் ஒத்துழைக்கத் தயாராய் உள்ளதாக தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் (Moon Jae-In) தெரிவித்துள்ளார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்