Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

COVID-19: G20 நாடுகள் 21 பில்லியன் டாலர் நிதி ஒதுக்க உறுதி

COVID-19: G20 நாடுகள் 21 பில்லியன் டாலர் நிதி ஒதுக்க உறுதி

வாசிப்புநேரம் -
COVID-19: G20 நாடுகள் 21 பில்லியன் டாலர் நிதி ஒதுக்க உறுதி

கோப்புப்படம்: AFP

G20 நாடுகள் கொரோனா கிருமிப் பரவலை எதிர்த்துப் போராட 21 பில்லியன் டாலர் நிதி ஒதுக்க உறுதியளித்துள்ளன.

கிருமித்தொற்றைக் கண்டறிதல், தடுப்பு மருந்து, சிகிச்சை முறை, ஆய்வு மேம்பாடு எனப் பல்வேறு அம்சங்களுக்கு அந்த நிதி பயன்படுத்தப்படும்.

இதற்குமுன், அத்தகைய நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் சுமார் 8 பில்லியன் டாலருக்கும் அதிகமான பற்றாக்குறை நிலவியது.

அதை ஈடுகட்ட, உலக நாடுகளின் அரசாங்கங்கள், அரசு சாரா அமைப்புகள், அற நிறுவனங்கள், தனியார் துறை ஆகியவை முன்வரவேண்டுமென்று G20 அமைப்பு கடந்த ஏப்ரலில் அழைப்பு விடுத்திருந்தது.

அமைப்புக்குத் தற்போது தலைமை தாங்கும் சவுதி அரேபியா, 500 மில்லியன் டாலர் நிதி வழங்க உறுதியளித்திருக்கிறது.

உலகளவில் 6.68 மில்லியனுக்கும் அதிகமானோர் கொரோனா நோய்ப் பரவலால் பாதிக்கப்பட்டனர். 391,000-க்கும் அதிகமானோர் மாண்டனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்