Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

COVID-19 தடுப்புமருந்துகள் கட்டுப்படியான விலையில் கிடைக்க வேண்டும் - பிரதமர் லீ

சிங்கப்பூர்ப் பிரதமர் லீ சியென் லூங் (Lee Hsien Loong), COVID-19 தடுப்புமருந்துகள் கட்டுப்படியான விலையில் அனைவருக்கும் கிடைப்பதை உறுதிசெய்யும்படி, G20 நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

வாசிப்புநேரம் -
COVID-19 தடுப்புமருந்துகள் கட்டுப்படியான விலையில் கிடைக்க வேண்டும் - பிரதமர் லீ

(கோப்புப் படம்: REUTERS/Dado Ruvic/Illustration/File Photo)

சிங்கப்பூர்ப் பிரதமர் லீ சியென் லூங் (Lee Hsien Loong), COVID-19 தடுப்புமருந்துகள் கட்டுப்படியான விலையில் அனைவருக்கும் கிடைப்பதை உறுதிசெய்யும்படி, G20 நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

நோய்ப்பரவலின் நீண்டகால பாதிப்பை எதிர்கொள்வதற்கு, அது அவசியம் என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

சவுதி அரேபியாவின் தலைமையில் இணையம் வழி நடைபெறும் G20 மாநாட்டில் திரு. லீ பேசினார்.

தடுப்புமருந்து ஆராய்ச்சியை விரைவுபடுத்த, சிங்கப்பூர் அனைத்துத் தரப்பினருடனும் தொடர்ந்து ஒத்துழைக்கும் என்றார் அவர்.

உலக அளவில், நோய்க் கண்காணிப்புக் கட்டமைப்பை வலுப்படுத்துவதன் அவசியத்தையும் பிரதமர் லீ சுட்டினார்.

அடுத்த முறை ஏற்படக்கூடிய கிருமிப்பரவலைக் கண்டறிந்து, கட்டுப்படுத்தி, எதிர்கொள்வதற்கு நாடுகளைத் தயார்நிலையில் வைத்திருக்க அத்தகைய கட்டமைப்பு உதவும் என்றார் திரு. லீ.

கட்டமைப்பு, பயனுள்ள வகையில் செயல்படுவதை உறுதிசெய்ய, நாடுகளின் தேசிய அளவிலான செயல்திறன், நாடுகளுக்கு இடையிலான தகவல் பரிமாற்றம் ஆகியவை முக்கியம் என அவர் கூறினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்