Images
  • vaccine (6)
    (கோப்புப் படம்: AFP/GUILLAUME SOUVANT)

ஒரு பில்லியன் முறை போடக்கூடிய தடுப்புமருந்தை உலக நாடுகளுக்கு வழங்கவுள்ள G7 நாடுகள்

G7 நாடுகளின் தலைவர்கள், கூடுதலாக, ஒரு பில்லியன் முறை போடக்கூடிய தடுப்புமருந்தை உலக நாடுகளுக்கு வழங்க உறுதிதெரிவித்துள்ளனர்.

உலக மக்கள்தொகையில் உள்ள பெரியவர்களில் சுமார் 80 விழுக்காட்டினருக்குத் தேவையான அளவாக அது இருக்கும்.

நகல் அறிக்கை ஒன்றை மேற்கொள்காட்டி Bloomberg செய்தி நிறுவனம் அதனைத் தெரிவித்தது.

நோய்ப்பரவலை அடுத்த ஆண்டு இறுதிக்குள் முடிவுக்குக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்கா சுமார் 100 ஏழை நாடுகளுக்கு 500 மில்லியன் முறை போடத் தேவைான Pfizer தடுப்புமருந்தை வழங்கவிருக்கிறது.

200 மில்லியன் இந்த ஆண்டும் எஞ்சியவை அடுத்த ஆண்டும் விநியோகம் செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.

குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கும் ஆப்பிரிக்க ஒன்றியத்துக்கும் அமெரிக்கா தடுப்புமருந்தை வழங்கவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.  

Top