Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

G7 நாடுகள், ஏழை நாடுகளுக்கு 1 பில்லியன் தடுப்பூசிகளை வழங்கத் திட்டம்

ஏழை நாடுகளுக்கு ஒரு பில்லியன் முறை போடத்தேவையான தடுப்புமருந்துகளை, G7 நாடுகள் நன்கொடையாக வழங்கத் திட்டமிட்டுள்ளன.

வாசிப்புநேரம் -

ஏழை நாடுகளுக்கு ஒரு பில்லியன் முறை போடத்தேவையான தடுப்புமருந்துகளை, G7 நாடுகள் நன்கொடையாக வழங்கத் திட்டமிட்டுள்ளன.

அதுகுறித்து, இன்று நடைபெறும் உச்சநிலை மாநாட்டில் G7 நாடுகள் ஒப்புக்கொள்ளும் என எதிர்பார்ப்பதாக பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறினார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், 500 மில்லியன் அளவுள்ள Pfizer தடுப்புமருந்துகளை நன்கொடையாக வழங்கவிருப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து திரு. ஜான்சன் அவ்வாறு அறிவித்தார்.

ஏழை நாடுகளுக்குக் குறைந்தது 100 மில்லியன் அளவுள்ள தடுப்புமருந்துகளை, பிரிட்டன் கொடுக்கும் என்று அவர் சொன்னார்.

அதிலிருந்து 80 மில்லியன் அளவுள்ள தடுப்புமருந்துகள், உலகச் சுகாதார நிறுவனத்தின் Covax தடுப்பூசிப் பகிர்வுத் திட்டத்துக்கு வழங்கப்படும்.

எஞ்சியவை, தேவைப்படும் நாடுகளுடன் பகிர்ந்துகொள்ளப்படும்.

இருப்பினும், நன்கொடை மூலம் பெறப்படும் தடுப்புமருந்துகளின் அளவு, தேவையானதைக் காட்டிலும் மிகக் குறைவு எனச் சில அறநிறுவனங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

உலக அளவில், Covax திட்டத்தைச் சார்ந்து சுமார் 4 பில்லியன் பேர் இருப்பதாக, Oxfam அறநிறுவனம் குறிப்பிட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்