Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஒமக்ரான் கிருமிப்பரவல் குறித்து விவாதிக்க G7 நாடுகள் அவசரக் கூட்டம்

புதிய ஒமக்ரான் (Omicron) கிருமிப்பரவல் குறித்து விவாதிக்க, G7 நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் அவசரக் கூட்டம் நடத்தவிருக்கின்றனர்.

வாசிப்புநேரம் -
ஒமக்ரான் கிருமிப்பரவல் குறித்து விவாதிக்க G7 நாடுகள் அவசரக் கூட்டம்

படம்: AP Images

புதிய ஒமக்ரான் (Omicron) கிருமிப்பரவல் குறித்து விவாதிக்க, G7 நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் அவசரக் கூட்டம் நடத்தவிருக்கின்றனர்.

கனடா, பிரான்சு, இத்தாலி, பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி ஆகியவை G7 நாடுகள்.

அதற்குத் தலைமை வகிக்கும் பிரிட்டன் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

பிரிட்டனிலும் கிருமித்தொற்றால் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிய கிருமியின் பரவலால், உலக அளவில் பல நாடுகள் மீண்டும் தங்கள் எல்லைகளை மூடிவிட்டன.

COVID-19 கிருமிப்பரவல் முடிவுக்கு வந்துகொண்டிருப்பதாக எண்ணிய வேளையில், புதிய பரவல் நாடுகளிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

முதலில் தென் ஆப்பிரிக்காவில் தென்பட்ட கிருமி வகை, இப்போது பல நாடுகளுக்குப் பரவியுள்ளது.

காலம் கடப்பதற்கு முன் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

ஒமக்ரான் கிருமி டெல்ட்டா வகையைக் காட்டிலும் அதிவேகமாகப் பரவக் கூடியது என்று கூறப்படுகிறது.

இருப்பினும் கிருமியின் தன்மை குறித்த திட்டவட்டமான தகவல்கள் இல்லை.

-AFP 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்