Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கிருமிப்பரவலால் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்புகள் மீண்டும் நேராமல் இருக்க G-7 தலைவர்கள் கடப்பாடு

 கிருமிப்பரவலால் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்புகள் மீண்டும் நேராமல் இருக்க G-7 தலைவர்கள் கடப்பாடு

வாசிப்புநேரம் -
கிருமிப்பரவலால் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்புகள் மீண்டும் நேராமல் இருக்க G-7 தலைவர்கள் கடப்பாடு

படம்: REUTERS

COVID-19 போன்ற கிருமிப்பரவலால் ஏற்படும் கடுமையான பாதிப்புகள் மீண்டும் நேராமல் இருக்க G-7 தலைவர்கள் அனைத்து வளங்களையும் பயன்படுத்த முடிவெடுத்துள்ளனர்.

அந்த இலக்கை அடைய G-7 உச்சநிலைச் சந்திப்பின் இரண்டாம் நாளான இன்று பிரகடனம் ஒன்றை அவர்கள் வெளியிடவிருக்கின்றனர்.

தடுப்புமருந்தைத் தயாரிப்பதற்குத் தேவைப்படும் காலத்தைக் குறைப்பது நோக்கம்.

100 நாள்களுக்குள் தடுப்புமருந்தை உருவாக்குவது இலக்கு.

உச்சநிலைச் சந்திப்பை நேற்று அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைத்த பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson), அனைத்துலகச் சமத்துவமின்மையைக் களைய வேண்டுகோள் விடுத்தார்.

2008ஆம் ஆண்டு நிதிநெருக்கடியின் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவேண்டும் என்றார் அவர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்