Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சீனாவின் அதிகரித்துவரும் செல்வாக்கை எதிர்கொள்ள G7 நாடுகள் வெளியிட்டுள்ள திட்டம்

சீனாவின் அதிகரித்துவரும் செல்வாக்கை எதிர்கொள்ள G7 நாடுகள் வெளியிட்டுள்ள திட்டம் 

வாசிப்புநேரம் -

சீனாவின் அதிகரித்துவரும் செல்வாக்கைக் கையாள, வளரும் நாடுகளின் பெரிய அளவிலான உள்கட்டமைப்புத் திட்டம் குறித்து G 7 சந்திப்பில் கலந்துபேசப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட தலைவர்கள் அது தொடர்பான திட்டத்தை இன்று வெளியிட்டனர்.

மேற்கத்தியக் கொள்கைகளையும் தரத்தையும் பிரதிபலித்து, அதேமுறையில் வர்த்தகம் செய்வதற்கான மாற்று வழியாகவும் அந்தத் திட்டம் விளங்கும் என்று அமெரிக்காவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

குறைந்த, நடுத்தர வருமானம் பெறும் நாடுகளுக்குச் சாதகமான, வெளிப்படையான முறையில் செலவு செய்ய, 'Build Back Better World' எனும் திட்டத்தைத் திரு. பைடன் முன்வைத்தார்.

சீனாவின் செல்வாக்கைச் சமாளிக்கும் வகையில் அந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

G7 தலைவர்கள் அதற்கு ஆதரவளிக்க இணங்கியுள்ளனர்.

இருப்பினும் அந்தத் திட்டத்துக்காக எந்தெந்த நாடுகள் எவ்வளவு செலவிடும் என்பன போன்ற விவரம் வெளியிடப்படவில்லை.

சீனாவில் சின்சியாங் (Xinjiang) மாநில விவகாரம் தொடர்பில், G7 நட்பு நாடுகளின் ஆதரவைப் பெற அமெரிக்கா நம்பிக்கை கொண்டுள்ளது.

ஆனால் அதற்குப் போதுமான ஆதரவு கிட்டுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஆயினும், இதுவரை G7 சந்திப்பு சிறப்பாக நடைபெறுவதாகத் திரு. பைடன் கூறியுள்ளார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்