Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

G7 உச்சநிலைச் சந்திப்பு வெள்ளை மாளிகையில் நடைபெறலாம்-அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், G7 உச்சநிலைச் சந்திப்பு வெள்ளை மாளிகையில் நடைபெறக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
G7 உச்சநிலைச் சந்திப்பு வெள்ளை மாளிகையில் நடைபெறலாம்-அமெரிக்க அதிபர் டிரம்ப்

(படம்: AFP/Brendan Smialowski)

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், G7 உச்சநிலைச் சந்திப்பு வெள்ளை மாளிகையில் நடைபெறக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.

அந்தச் சந்திப்பில் நேரில் வந்து கலந்துகொள்ளும்படி திரு. டிரம்ப் G7 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

முதலில் அந்தச் சந்திப்பு, Camp David உல்லாசத் தலத்தில், ஜூன் மாதம் நடைபெறத் திட்டமிடப்பட்டது.

பின்னர், COVID-19 சூழல் காரணமாக அதைக் காணொளி மூலம் நடத்த, திரு. டிரம்ப் திட்டமிட்டார்.

உலகளாவிய நிலைமை மேம்பட்டு வருவதைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையில் அந்தக் கூட்டத்தை நடத்த அதிபர் டிரம்ப் முடிவெடுத்துள்ளார்.

உலகப் பொருளியல், முடக்கத்திலிருந்து மீண்டுவரும் நிலையில் ஒற்றுமையை வெளிப்படுத்த அவ்வாறு ஏற்பாடு செய்வதாக அவர் குறிப்பிட்டார்.

பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி ஜப்பான்-ஆகிய நாட்டுத் தலைவர்களிடமும் அதுகுறித்து, திரு. டிரம்ப் பேசியுள்ளார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்