Images
  • samsung
    (படம்: AFP/Timothy A Clary)

Samsungஇன் புதிய Galaxy திறன்பேசி அடுத்த மாதம் அறிமுகம்

சான் ஃபிரான்சிஸ்கோ: சாம்சுங் நிறுவனத்தின் புதிய Galaxy திறன்பேசி அடுத்த மாதம் 11ஆம் தேதி அறிமுகம் செய்யப்படவிருக்கிறது. அந்த வெளியீட்டு நிகழ்ச்சிக்காக அந்நிறுவனம் அழைப்பிதழ்களை மும்முரமாக அனுப்பி வருகிறது.

புதிய கருவி "நான்கு மடங்கு" உற்சாகத்தை அளிக்கும் என்று அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய கருவியில் 4 கேமராக்கள் இருக்குமோ என சிலர் ஊகிக்கத் தொடங்கிவிட்டனர்.

உலகின் முன்னணி திறன்பேசி தயாரிப்பாளரான தென்கொரிய நிறுவனம் சாம்சுங் கடந்த மாதம் அதன் Galaxy Note 9யை அறிமுகம் செய்தது.

மெதுவடைந்து வரும் திறன்பேசி விற்பனைகளுக்கு புத்துயிரூட்ட சாம்சுங்கும் மற்ற நிறுவனங்களும் முயன்று வருகின்றனர்.

விற்பனைகளில் முதல் நிலையில் இருக்கும் சாம்சுங் இரண்டாம் காலாண்டில் திறன்பேசி விற்வனைகளில் 22 விழுக்காட்டுச் சரிவைக் கண்டுள்ளது.

Apple நிறுவனம் அதன் புதிய iPhoneகளைஅறிமுகப்படுத்திய சில நாள்களில் சாம்சுங்கின் புதிய திறன்பேசியைப் பற்றிய செய்தி வெளிவந்துள்ளது.

Top