Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மோசமடையும் எரிசக்தி நெருக்கடி - விண்ணை முட்டும் எண்ணெய் விலைகள்

எரிசக்தி நெருக்கடி மோசமடைந்து வருவதால் எரிவாயு விலைகள் விண்ணை முட்டும் அளவிற்கு அதிகரித்துள்ளன. 

வாசிப்புநேரம் -
மோசமடையும் எரிசக்தி நெருக்கடி - விண்ணை முட்டும் எண்ணெய் விலைகள்

(படம்: REUTERS/Kevin Lamarque)

எரிசக்தி நெருக்கடி மோசமடைந்து வருவதால் எரிவாயு விலைகள் விண்ணை முட்டும் அளவிற்கு அதிகரித்துள்ளன.

  • ஏன்?

கிருமிப்பரவல் சூழல் தணிந்து, மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. விமானப் பயணங்கள் மேற்கொள்வது, சாலைகளில் வாகனங்களை ஓட்டுவது என மக்களின் எரிவாயுப் பயன்பாடு மீண்டும் அதிகரித்துள்ளது.

தேவையை ஈடுகட்டும் அளவு விநியோகம் இல்லை.

நிலக்கரி, இயற்கை எரிவாயு, எண்ணெய் ஆகியவற்றின் விநியோகம் வெகுவாகக் குறைந்துள்ளது.

எண்ணெய் விலை, 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஒரு பீப்பாய் பூஜ்யத்துக்குக் கீழ் 40 டாலராக இருந்தது. தற்போது அது 120 டாலருக்கு உயர்ந்துள்ளது.

  • உலக அளவில் எரிவாயுப் பற்றாக்குறை

ஐரோப்பாவிலும், சீனா, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளது.

அதற்கு முக்கிய காரணம் நிலக்கரித் தட்டுப்பாடு. இதனால் அவற்றின் கவனம் எண்ணெய் பக்கம் திரும்ப, அதுவும் விலை ஏற்றத்துக்குக் காரணமானது.

ஐரோப்பாவில் இந்த ஆண்டு குளிர் எப்போதையும் விடக் கடுமையாக இருக்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

அதனால் நாளொன்றுக்கு அரை மில்லியன் பீப்பாய் அதிகமாகத் தேவைப்படலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதனால் முன்னெச்சரிக்கையாக நாடுகள் எண்ணெயை வாங்கிச் சேமிக்கின்றன.

  • முடிவு வருமா?

அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களில் பல, மீண்டும் சந்தையில் அதிகமாக விநியோகம் செய்து ஏமாற்றம் அடைய விரும்பவில்லை.
அதோடு, கடந்த பத்து ஆண்டுகளில் பணத்தை இழந்தப்  பங்குதாரர்களுக்கு அதைத் திருப்பித் தருவதில் அவை அதிக கவனம் செலுத்துகின்றன.

பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளைக் கொண்ட அமைப்பான OPEC-ற்கு, உற்பத்தியைப் பெருக்கும்படி நெருக்குதல் அளிக்கப்பட்டுவருகிறது.

ஆனால் 2020 தொடக்கத்தில் குறைக்கப்பட்ட உற்பத்தியை, அமைப்பு படிப்படியாகத் தான் அதிகரிக்கிறது.

எண்ணெய் விலைகள் தொடர்ந்து அதிகமாக இருப்பதில் அமைப்பு திருப்தி அடைவதுபோல் தோன்றுவதாகச் சந்தை கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்