Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பில் கேட்ஸ் - மலிண்டா தம்பதிக்கிடையே மண முறிவு

செல்வந்தர் பில் கேட்ஸும் (Bill Gates), அவருடைய மனைவி மலிண்டாவும் (Melinda) தங்கள் மண முறிவு குறித்து அறிவித்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
பில் கேட்ஸ் - மலிண்டா தம்பதிக்கிடையே மண முறிவு

(படம்: AP/Elaine Thompson)

செல்வந்தர் பில் கேட்ஸும் (Bill Gates), அவருடைய மனைவி மலிண்டாவும் (Melinda) தங்கள் மண முறிவு குறித்து அறிவித்துள்ளனர்.

27 ஆண்டு மண வாழ்க்கைக்கு பிறகு, அவர்கள் அதனை அறிவித்துள்ளனர்.

"எங்களுடைய உறவை மேம்படுத்துவதற்கு நிறைய முயற்சிகளை மேற்கொண்டு, மண விலக்கு பற்றி ஆழமாக யோசித்து முடிவெடுத்தோம்" என்று தம்பதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1987- இல் Microsoft நிறுவனத்தில் பணிபுரியத் தொடங்கியபோது, பில் கேட்ஸை முதன்முதலில் சந்தித்தார் மலிண்டா.

1987- இல் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

தம்பதியாகத் தொடர்ந்து வாழமுடியாது என்றாலும், Bill & Melinda Gates அறநிறுவனத்தின் பணியை இணைந்து தொடரவிருப்பதாக அவர்கள் கூறினர்.

உலகில் அனைவரும் ஆரோக்கியமான பயனுள்ள வாழ்க்கையை வாழ வழி வகுக்கும் நோக்கில் அறநிறுவனத்தின் செயல்பாட்டில் இருவரும் இணைந்து செயல்படப் போவதாகக் கூறப்பட்டது.

உலகின் செல்வாக்கு மிக்க Bill & Melinda Gates தனியார் அறநிறுவனத்தின் மதிப்பு சுமார் 50 பில்லியன் டாலர்.

-Agencies/ec 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்