Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஓரினப் பெங்குவின் தம்பதியின் தத்து முயற்சி

ஜெர்மனியின் பெர்லின் விலங்குத் தோட்டத்தில் உள்ள ஸ்கிப்பர்(Skipper), பிங்(Ping) எனும் பெங்குவின்கள் இணையாக வாழ்ந்துவருகின்றன.

வாசிப்புநேரம் -
ஓரினப் பெங்குவின் தம்பதியின் தத்து முயற்சி

(படம்: AFP)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

ஜெர்மனியின் பெர்லின் விலங்குத் தோட்டத்தில் உள்ள ஸ்கிப்பர்(Skipper), பிங்(Ping) எனும் பெங்குவின்கள் இணையாக வாழ்ந்துவருகின்றன.

பத்து வயதான அவ்விரண்டும் ஆண் பெங்குவின்கள்.

அந்த வித்தியாசமான இணை கல் ஒன்றை அடைகாத்துக் குஞ்சு பொரிக்கும் முயற்சியில் ஈடுபட்டது.

இப்போது அவற்றுக்கு உண்மையான பெங்குவின் முட்டையை அடைகாக்கும் வாய்ப்புக் கிட்டியுள்ளது.

அதே விலங்குத் தோட்டத்தில் வேறொரு பெங்குவின் ஜோடி அடைகாக்கத் தெரியாமல் அடிக்கடி முட்டையை சேதப்படுத்திவந்தது.

அவற்றின் முட்டையை எடுத்து ஸ்கிப்பர்-பிங் இணையிடம் தர முடிவெடுத்தனர் பராமரிப்பாளர்கள்.

அந்த முட்டையை ஆசையுடன் அள்ளி எடுத்துக்கொண்டன ஸ்கிப்பரும், பிங்கும்.

தத்துப் பெற்றோர் இருவரும் மிகவும் சிறப்பாக முட்டையை அடைகாப்பதாய் விலங்குத் தோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

முட்டை பொரிந்தால், கடந்த 20ஆண்டில் விலங்குத் தோட்டத்தில் பிறந்த முதல் பெங்குவினாக அது விளங்கும்.

விலங்குத் தோட்டங்களிலும், இயற்கையான வாழ்விடத்திலும், பெங்குவின்களிடையே ஓரினக் காதல் புதிதல்ல என்கின்றனர் நிபுணர்கள். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்