Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உடற்குறை பற்றிய கவலையில்லாமல் காராத்தேயில் பெயர்பதிக்கும் காஸா வீரர்

உடற்குறை பற்றிய கவலையில்லாமல் காராத்தேயில் பெயர்பதிக்கும் காஸா வீரர்

வாசிப்புநேரம் -

சாதிக்க உடற்குறை ஒரு தடையில்லை என்பதை மீண்டும் ஒருவர் நிரூபித்துள்ளார்.

பாலஸ்தீன வட்டாரத்தின் காஸா நகரைச் சேர்ந்த யூசப் அபு அமீரா காராத்தேயில் பெயர்பதித்து வருகிறார்.

24 வயதான அபு அமீரா பிறக்கும்போது கால்கள் இல்லாமல் பிறந்தவர், கைகளும் வளரவில்லை.

தற்போது ஆரஞ்சு பெல்ட் வைத்துள்ள அபு அமீரா, விரைவில் அனைத்துலக அளவிலான போட்டிகளில் பங்குபெறத் தயாராகி வருகிறார்.

குறை என்பது உள்ளத்தில் தான் உள்ளது, உடலில் இல்லை என்பதைத் தமக்கு தாமே உணர்த்தவேண்டும் என்பதில் அதிக அக்கறை கொண்டதாக அவர் கூறினார்.

தம் உடலைக் கொண்டு கராத்தேயில் வெல்வதற்குத் தீவிரப் பயிற்சியில் இறங்கியுள்ளார் அபு அமீரா.

உடற்குறையுள்ள மற்றவர்களைவிட அபு அமீராவிடம் வெவ்வேறு திறன்கள் உள்ளன; அதனால் அவர் சிறப்பாக செயல்படுவதாகப் பயிற்றுவிப்பாளரும் கூறினார்.

குறைகளைப் பற்றிக் கவலைப்படாத அபு அமீரா கடந்த ஆண்டு சட்டத்துறையில் பட்டம் பெற்றார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்