Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

வேலையிடப் பாலின சமத்துவத்தை அடைய 200 ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம் - உலகப் பொருளியல் மன்றம்

வேலையிடத்தில் பாலின சமத்துவத்தைச் சாதிக்க இன்னும் சில நூறு ஆண்டுகள் ஆகக்கூடும் என்று உலகப் பொருளியல் மன்றத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

வாசிப்புநேரம் -
வேலையிடப் பாலின சமத்துவத்தை அடைய 200 ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம் - உலகப் பொருளியல் மன்றம்

படம்: AFP

வேலையிடத்தில் பாலின சமத்துவத்தைச் சாதிக்க இன்னும் சில நூறு ஆண்டுகள் ஆகக்கூடும் என்று உலகப் பொருளியல் மன்றத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

சம்பள சமத்துவத்தில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு, சில மேம்பாடுகள் காணப்பட்டுள்ளதாக அறிக்கை கூறியது. அதே காலக்கட்டத்தில் உலகப் பாலின இடைவெளி அதிகரித்தது.

அரசியலில் பெண்களின் பங்களிப்பு குறைந்து வருகிறது.

அதே வேளையில், கல்வி, சுகாதாரம் ஆகியவறைப் பெறுவதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான இடைவெளி மிக அதிகமாய் உள்ளதாக அறிக்கை எச்சரித்தது.

வேலையிடத்தில் நிலவும் பாலின இடைவெளியைச் சரிசெய்ய இன்னும் சுமார் 200 ஆண்டுகள் ஆகக்கூடும் என்பது மன்றத்தின் முன்னுரைப்பு.

ஜெனிவாவைத் தளமாகக் கொண்ட அமைப்பின் அறிக்கை 149 நாடுகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே நிலவும் சமத்துவமின்னையை அலசியது.

கல்வி, ஆரோக்கியம், பொருளியல் வாய்ப்பு, அரசியல் அதிகாரம் ஆகிய 4  பிரிவுகளில் நிலவும் சமத்துவமின்மை கருத்தில் கொள்ளப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்