Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

குழந்தையின் பாலினத்தை அறிவிக்கும் கொண்டாட்டம் - சிறப்புக் கருவி வெடித்ததால் தந்தை மரணம்

நியூயார்க்கில் குழந்தையின் பாலினத்தை அறிவிக்கும் கொண்டாட்டத்திற்காக சிறப்பு கருவியை உருவாக்கிக்கொண்டிருந்த தந்தை, அது வெடித்ததால் மாண்டார்.

வாசிப்புநேரம் -
குழந்தையின் பாலினத்தை அறிவிக்கும் கொண்டாட்டம் - சிறப்புக் கருவி வெடித்ததால் தந்தை மரணம்

(படம்: Facebook)

நியூயார்க்கில் குழந்தையின் பாலினத்தை அறிவிக்கும் கொண்டாட்டத்திற்காக சிறப்பு கருவியை உருவாக்கிக்கொண்டிருந்த தந்தை, அது வெடித்ததால் மாண்டார்.

வெடிப்பில் மாண்ட 28-வயது கிறிஸ்டஃபர் பெக்னியின் (Christopher Pekny) சகோதரரும் காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை அறிவிப்பதற்காகப் பெற்றோர் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்வது வழக்கம்.

நியூயார்க் காவல்துறையும், வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்யும் பிரிவும் வெடிப்பு குறித்து விசாரித்து வருகின்றன.

அந்தச் சிறப்பு கருவியில் ஒரு குழாய் இருந்ததாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

நினைத்துப் பார்க்கவே முடியாத துயரம் நேர்ந்திருப்பதாகச் செய்தியாளர்களிடம் கூறினார் பெக்னியின் மூத்த சகோதரர்.

அமெரிக்காவில், கடந்த சில ஆண்டுகளாகக், கருவிலிருக்கும் குழந்தையின் பாலினம் அறிவிக்கும் கொண்டாட்டங்களின் போது அசம்பாவிதம் நடப்பது வாடிக்கையாகி வருகிறது.

கடந்த ஆண்டு கலிஃபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீப் பரவலுக்கு அத்தகைய ஒரு கொண்டாட்டமே காரணம் என்று குறைகூறப்பட்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்