Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

குழந்தை பாலினம் தெரிவிக்கும் விழாவில் விமானம் விபத்து

டெக்ஸஸ்ஸில் குழந்தை ஆணா, பெண்ணா என்று அறிவிக்கும் விழாவின்போது விமானம் விபத்துக்குள்ளானது.

வாசிப்புநேரம் -
குழந்தை பாலினம் தெரிவிக்கும் விழாவில் விமானம் விபத்து

(படம்: Pixabay)

அமெரிக்கா: டெக்ஸஸ்ஸில் குழந்தை ஆணா, பெண்ணா என்று அறிவிக்கும் விழாவின்போது விமானம் விபத்துக்குள்ளானது.

செப்டம்பர் 7 ஆம் தேதி நடந்த விபத்து குறித்து அமெரிக்க தேசிய போக்குவரத்துப் பாதுகாப்பு வாரியம் இவ்வாரம் தெரிவித்ததாக CNN கூறியுள்ளது.

நண்பருக்குப் பெண் குழந்தை பிறக்கவுள்ளதைக் கொண்டாடும் வண்ணம் விமானத்திலிருந்து 350 கேலன் (Gallon) இளஞ்சிவப்பு நிற தண்ணீரைக் கொட்ட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவ்வாறு செய்ததும் விமானம் நின்றது.

அது போதுமான உயரத்தில் செலுத்தப்படாததால் கோளாறு ஏற்பட்டதாக CNN தெரிவித்துள்ளது.

அதோடு ஒருவர் பயணம் செய்ய வேண்டிய அந்த விமானத்தில் இருவர் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானிக்குக் காயங்களில்லை. அவருடன் இருந்த பயணிக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்