Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஜெனொவா மேம்பாலச் சாலை விபத்து - இடிபாடுகளில் சிக்கியிருப்போரைத் தேடி மீட்கும் பணி தீவிரம்

இத்தாலியின் ஜெனொவா (Genoa) நகரில் மேம்பாலச் சாலை இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியிருப்போரைத் தேடி மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வாசிப்புநேரம் -
ஜெனொவா மேம்பாலச் சாலை விபத்து - இடிபாடுகளில் சிக்கியிருப்போரைத் தேடி மீட்கும் பணி தீவிரம்

(படம்: Reuters/Stringer)

இத்தாலியின் ஜெனொவா (Genoa) நகரில் மேம்பாலச் சாலை இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியிருப்போரைத் தேடி மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தீயணைப்பு வீரர்கள், மோப்ப நாய்களின் உதவியோடு மீட்புப் பணியைத் தொடர்கின்றனர்.

அந்தச் சம்பவத்தில், மூன்று குழந்தைகள் உட்பட 35 பேர் மாண்டனர் என்றும் அந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

காயமுற்ற பலர், மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, இத்தாலி முழுவதும் உள்ள பாலங்களும் ஏனைய உள்கட்டமைப்பு வசதிகளும் மறு சோதனைக்கு உட்படுத்தப்படுமெனப் பிரதமர் குஸைப்பெ கொண்டி (Giuseppe Conte) கூறியுள்ளார்.

இதுபோன்றதொரு கொடிய விபத்து மீண்டும் ஒருமுறை நடக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்றார் அவர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்