Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

'ஜார்ஜ் ஃபுளோய்டைக் காப்பாற்ற முடியவில்லையே - கலங்கிய பதின்ம வயதுப் பெண்

'ஜார்ஜ் ஃபுளோய்டைக் காப்பாற்ற முடியவில்லையே - கலங்கிய பதின்ம வயதுப் பெண்

வாசிப்புநேரம் -

அமெரிக்காவின் மினியாபொலிஸ் (Minneapolis) நகரில் காவல்துறை அதிகாரியால் தடுத்து வைக்கப்பட்ட 46 வயது கறுப்பின ஆடவர் ஜார்ஜ் ஃபுளோய்ட் (George Floyd) மாண்டது குறித்த வழக்கு விசாரணை தொடர்கிறது.

வழக்கில், சம்பவத்தைக் காணொளியாகப் பதிவு செய்த டார்னெல்லா ஃபிரேஸர் (Darnella Frazer) என்ற பதின்மவயதுப் பெண் சாட்சியமளித்தார்.

சென்ற ஆண்டு மே மாதம் 25ஆம் தேதியன்று நடந்த சம்பவத்தின் தொடர்பில் காவல்துறை அதிகாரி டெரக் சோவின் (Derek Chauvin) கொலைக் குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார்.

ஃபுளோய்ட்டைக் காப்பாற்ற முயற்சி செய்யாததை எண்ணி வருந்துவதாக டார்னெல்லா நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.

ஃபுளோய்ட் பயந்து போய் தம் உயிருக்காக மன்றாடியதைக் கண்டதாகவும் அவர் சொன்னார். அவர் மீது நடத்தப்பட்ட வன்முறைச் செயல் சரியல்ல என்றும் அவர் சுட்டினார்.

வழக்கு ஒரு மாதத்திற்குத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்