Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

COVID-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளாவிட்டால் ஆபத்து அதிகம்: ஜெர்மன் சுகாதார அமைச்சர்

COVID-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளாவிட்டால் ஆபத்து அதிகம்: ஜெர்மன் சுகாதார அமைச்சர்

வாசிப்புநேரம் -

பொதுமக்கள் COVID-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளாவிட்டால் ஆபத்து அதிகம் என்று ஜெர்மன் சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் (Jens Spahn) எச்சரித்துள்ளார்.

இன்னும் சில மாதங்களில் ஜெர்மனியில் மக்கள், ஒன்று தடுப்பூசி போட்டுக்கொள்வார்கள், நோய்த்தொற்று ஏற்பட்டு உடல்நலம் தேறுவார்கள் அல்லது மாண்டுபோவார்கள் என்று அவர் கவலை தெரிவித்தார்.

குடிமக்கள் விரைந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தற்போது ஜெர்மனியில் நோய்ப்பரவல் தீவிரமடைந்து வருகிறது.

மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கையும் கூடத்தொடங்கியுள்ளதால் நெருக்கடி அதிகரித்துள்ளது.

இதுவரை ஜெர்மனியில் 68 விழுக்காட்டினர் மட்டுமே முழுமையாகத் தடுப்பூசி போட்டுள்ளனர்.

இன்று அந்நாட்டில் 30,643 பேருக்குப் புதிதாக நோய்த்தொற்று அடையாளம் காணப்பட்டது.

ஜெர்மனியில் 5.3 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. 100,000-க்கும் அதிகமானோர் நோய்த்தொற்றால் மாண்டனர்.

-AFP  
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்