Images
  • Germany
    படம்: AFP / Tobias SCHWARZ

ஜெர்மனியில் ஒரே நாளில் 7,830 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று


ஜெர்மனியில் மேலும் 33 பேர் மாண்டதால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,734 க்கு உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 7,830 பேர் பாதிக்கப்பட்டனர்.

அவர்களையும் சேர்த்து கிருமித்தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை மொத்தம் 348,557 என்று Robert Koch தொற்றுநோய் நிலையம், குறிப்பிட்டுள்ளது.

பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஜெர்மனியில் புதிய கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. 

மக்கள் கூட்டம் அதிகமுள்ள, மதுக்கூடங்கள், உணவகங்கள் போன்றவை இரவு 11 மணிக்குள் மூடப்படவேண்டும்.

பாதிக்கப்பட்டோரில் 100,000 பேருக்கு 35 க்கும் அதிகமானோர் வசிக்கும் பகுதிகளில் இருப்போர் பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயம்.

Top