Images
  • germany afp
    (கோப்புப் படம்: AFP)

24 மணி நேரத்தில் 16,000க்கும் அதிகமானோருக்குக் கிருமித்தொற்று... எங்கு?

ஜெர்மனியில் ஒரே நாளில் 16,290 பேருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டது.

அங்கு இதுவரை 3 மில்லியனுக்கும் அதிகமானோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக Robert Koch தொற்றுநோய்களுக்கான நிலையம் தகவல் அளித்தது.

ஜெர்மனியில் மேலும் 110 பேர் கிருமித்தொற்றால் மாண்டனர். அங்கு மாண்டோர் எண்ணிக்கை 83,192 ஆனது.

சென்ற மாதத் தொடக்கத்தில் முடக்கநிலை நடப்புக்குக் கொண்டுவரப்பட்டது. இருப்பினும், அங்கு தற்போது மூன்றாம் கட்டமாகக் கிருமிப்பரவல் மோசமடைந்துகொண்டிருக்கிறது.  

Top