Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஜெர்மனி: COVID-19 நோய்த்தொற்றை இப்போது கட்டுக்குள் கொண்டுவராமற்போனால் அது கட்டுக்கடங்காமல் போகும் ஆபத்து உள்ளது: பிரதமர் அலுவலகம்

ஜெர்மனி, அடுத்த சில வாரங்களில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் அல்லது தடுப்பூசிகளை எதிர்க்கும் புதிய கிருமி வகைகள் உருவாகும் அபாயம் ஏற்படலாம் என்று பிரதமர் ஏங்கலா மெர்க்கலின் (Angela Merkel) மூத்த உதவியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -

நோய்த்தொற்றின் ஆக ஆபத்தான கட்டத்தில் ஜெர்மனி இருப்பதாகப் பிரதமர் அலுவலக உயர் அதிகாரியான Helge Braun, ஊடகங்களிடம் தெரிவித்தார்.

அடுத்த சில வாரங்கள், கிருமிப்பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர முடியுமா என்பதைத் தீர்மானிக்கும் என்றார் அவர்.

கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மீண்டும் விரைவாக அதிகரித்தால், அடுத்து உருவாகும் கிருமி வகை, தடுப்பூசியை எதிர்க்கும் ஆற்றலைப் பெற்றிருக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டது.

பின்பு, அதற்குப் புதிய தடுப்பூசிகள் தேவைப்படும், மீண்டும் தடுப்பூசி போடும் நடவடிக்கைகளை முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

எனவே, கிருமித்தொற்று அதிகமுள்ள வட்டாரங்களில் இரவுநேர ஊரடங்கு விதிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

நேற்று ஒருநாளில் மட்டும் ஜெர்மனியில், 20,472 பேருக்குக் கிருமித்தொற்று உறுதியானது.

157 பேர் கிருமித்தொற்றால் மாண்டனர்.

- Reuters 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்