Images
  • germany covid
    (படம்: Ina Fassbender/AFP)

COVID-19 தொற்றால் ஜெர்மனியில் மாண்டோர் எண்ணிக்கை 100,000ஐத் தாண்டியது

ஜெர்மனியில் கிருமிப்பரவல் தொடங்கியதிலிருந்து, கிருமித்தொற்றால் மாண்டோர் எண்ணிக்கை 100,000ஐத் தாண்டியுள்ளதாக Robert Koch நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணிநேர இடைவெளியில் அங்கு மேலும் 351 பேர் கிருமித்தொற்றால் மாண்டனர்.

ஜெர்மனியில் கிருமித்தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை உச்சநிலையை எட்டும் வேளையில், அங்குள்ள மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சை வார்டுகளும் மிக விரைவில் நிரம்புகின்றன.

இதனால் சில மருத்துவமனைகளில் நெருக்குதல் ஏற்பட்டுள்ளது. அவற்றில் சிகிச்சை பெறும் சிலரை வெளிநாடுகளுக்கு அனுப்பவேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, சென்ற வாரம் ஜெர்மனி, மேலும் கடுமையான கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது. அங்குக் கிருமிப்பரவலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் முடக்கநிலை நடப்புக்கு வந்துள்ளது. 

Top