Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஜெர்மனி: பாதுகாப்பு இடைவெளி நடைமுறை அடுத்த மாதம் 29ஆம் தேதி வரை நீட்டிப்பு

ஜெர்மனி, பாதுகாப்பு இடைவெளி நடைமுறையை அடுத்த மாதம் 29ஆம் தேதி வரை நீட்டிக்கவிருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் ஏங்கலா மெர்க்கல் (Angela Merkel) அறிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
ஜெர்மனி: பாதுகாப்பு இடைவெளி நடைமுறை அடுத்த மாதம் 29ஆம் தேதி வரை நீட்டிப்பு

(படம்: Peter Steffen/Pool via REUTERS)

ஜெர்மனி, பாதுகாப்பு இடைவெளி நடைமுறையை அடுத்த மாதம் 29ஆம் தேதி வரை நீட்டிக்கவிருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் ஏங்கலா மெர்க்கல் (Angela Merkel) அறிவித்துள்ளார்.

பத்துப்பேர் வரை பொது இடங்களில் ஒன்றுகூட அனுமதிக்கப்படுவர்.

ஆனால், கூடுமானவரை அடுத்தவர்களுடன் நேரடித் தொடர்பில் வருவதை ஜெர்மானியர்கள் குறைத்துக்கொள்ளவேண்டும்.

அதுகுறித்து ஜெர்மனியின் மத்திய அரசாங்கமும் 16 மாநிலங்களும் இணக்கம் கண்டுள்ளன.

எனினும், சிறிய அளவில் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளால் அதிருப்தியடைந்துள்ளன.

சில மாநிலங்கள், COVID-19 நோய்க்கு எதிரான கட்டுப்பாடுகளை முற்றிலுமாக நீக்கிவிட விருப்பம் தெரிவித்துள்ளன.

ஜெர்மனியில் சுமார் 179,000 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,300 பேர் மாண்டனர்.

சமூக அளவில் நோய்ப்பரவல் சம்பவங்கள் அதிகரித்தால் கூடுதல் விதிமுறைகளை அமல்படுத்தவேண்டிவரும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்