Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஜெர்மனி: வெள்ளத்தை அரசாங்கம் கையாண்ட விதத்தில் மக்கள் அதிருப்தி

ஜெர்மனியில் வெள்ளத்தில் உயிர் பிழைத்தவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவருகிறது.

வாசிப்புநேரம் -

ஜெர்மனியில் வெள்ளத்தில் உயிர் பிழைத்தவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவருகிறது.

மேற்கு ஜெர்மனியில் ஏற்பட்ட வெள்ளத்தில் பல கிராமங்கள் சீர்குலைந்தன.

இனிக் கண்டுபிடிக்கப்பட்டும் எவரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று நிவாரண அதிகாரி ஒருவர் மக்களிடம் கூறினார். இது அவர்களிடையே இருந்த நம்பிக்கையை வெகுவாகக் குறைத்தது.

ஜெர்மானியர்கள் தங்களைப் பாதுகாக்க அரசாங்கம் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கருதுவதாக ஒரு கருத்தாய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளத்தில் 170 க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.

இந்தச் சம்பவம் ஜெர்மனியின் மோசமான இயற்கைப் பேரழிவுகளில் ஒன்றாகும்.

வெள்ளத்தில் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயினர்.

சாலைகளில் குப்பைகளை அகற்றி அடித்தளங்களில் இருந்து தண்ணீரை வெளியேற்றிக் காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அரசாங்கம் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு 250 மில்லியன் யூரோ வழங்கி உதவியது.

வெள்ளத்தில் சேதமான கட்டடங்களைச் சரிசெய்யவும் உள்கட்டமைப்பை சீர்செய்யவும் அந்தத் தொகை பயன்படுத்தப்படும்.

-Reuters 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்