Images
  • Germany
    கோப்புப் படம்: AFP / Christof STACHE

ஜெர்மனியின் புதிய அரசாங்கத்துடன் உறவை வலுப்படுத்த முனையும் அமெரிக்கா

ஜெர்மனியின் புதிய அரசாங்கத்துடன் உறவை வலுப்படுத்த விரும்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இருதரப்புக்கும் இடையே உள்ள பொதுவான அம்சங்களை அது சுட்டியுள்ளது.

ஜெர்மனி, ரஷ்யாவுடன் சேர்ந்து Nord Stream குழாய் அமைக்கும் திட்டத்துக்கான தடையை அமெரிக்கா நீக்கியது. அதிபர் ஜோ பைடன் ஜெர்மனியுடன் துரிதமாக உறவை வலுப்படுத்த விரும்புவதை அது காட்டுகிறது.

16 ஆண்டு ஜெர்மனியின் பிரதமராக இருந்த திருவாட்டி ஏங்கலா மெர்க்கலுக்குப் பிறகு, சமூக ஜனநாயகக் கட்சியின் ஓலாஃப் ஷோல்ஸ் (Olaf Sholz) புதிய பிரதமராகிறார்.

திரு. டோனல்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக இருந்தபோது ஜெர்மனியுடனான உறவில் பதற்றம் நீடித்தது.

குடியேறிகளை வரவேற்கும் திருவாட்டி மெர்க்கலின் கருத்தைத் திரு. டிரம்ப் வெளிப்படையாகக் குறைகூறியிருந்தார்.

திரு ஷோல்ஸ் தமது புதிய அரசாங்கம் கிருமிப்பரவலை முறியடிக்க, அவசரக் குழுவை அமைக்கும் என்று கூறியுள்ளார்.

மருத்துவமனைகள், பராமரிப்பு இல்லங்கள் போன்றவற்றில் பணியாற்றும் முன்னிலை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க ஒரு பில்லியன் டாலருக்குமேல் நிதி ஒதுக்க அவர் உறுதியளித்துள்ளார்.  

-AFP

Top