Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஜெர்மனி - அணிவகுப்பின்போது கார் மோதியதில் 18 சிறார் உட்பட 52 பேர் காயம்

ஜெர்மனியில் திருவிழா அணிவகுப்பில் கார் மோதியதில் 18 சிறார் உட்பட 52 பேர் காயமடைந்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
ஜெர்மனி - அணிவகுப்பின்போது கார் மோதியதில் 18 சிறார் உட்பட 52 பேர் காயம்

(படம்: Elmar Schulten/Waldeckische Landeszeitung via REUTERS)

ஜெர்மனியில் திருவிழா அணிவகுப்பில் கார் மோதியதில் 18 சிறார் உட்பட 52 பேர் காயமடைந்துள்ளனர்.

வோல்க்ஸ்மார்சன் (Volksmarsen) எனும் நகரில் நடந்த விழா அணிவகுப்பில் 29 வயது ஆடவர் தம்முடைய Mercedes காரை மோதியதாக சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த வாரம் ஹனாவ் நகரில் இன வெறுப்பு தொடர்பான துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் மாண்ட நிலையில் இச்சம்பவம் நேற்று இடம்பெற்றது.

அதன் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ஜெர்மானிய ஆடவரின் தலையில் காயம் ஏற்பட்டிருந்ததால், அவரிடம் விசாரணை நடத்த முடியவில்லை என்று அங்குள்ள ஊடகங்கள் கூறுகின்றன.

ஆனால், வேண்டுமென்றே காரை மோதிய சந்தேகத்தின் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்திவருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்